2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அராலியில் வீட்டுத்திட்டம்

Editorial   / 2018 ஜூன் 11 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

 

தேசிய வீடமைப்பு அதிகாரசபையால், ஜே - 160 அராலி மேற்கு கிராம அலுவலர் பிரிவில், 80 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

இதற்கான நடவடிக்கைகளை, வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி பொன்னம்பலம் பிறேமினி முன்னெடுத்துள்ளார்.

ஏற்கெனவே, வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 80 பயனாளிகளில் 23 பயனாளிகளுக்கு வேள்ட் விசன் நிறுவனம் மலசலகூட வசதியை வழங்க முன்வந்துள்ளது.

எனவே, வீடு மற்றும் மலசலகூடங்கள் அமைக்கும் பயனாளிகளுக்கான கட்டட அனுமதியை, முன்னுரிமை அடிப்படையில் காலம் தாழ்த்தாது வழங்கி உதவுமாறு, பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X