Freelancer / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி - மயில்வாகனபுரத்தில் நத்தார் நிகழ்வு முடித்து விட்டு கார் ஒன்றில் பயணித்த அருட்தந்தையர்களின் கார் வீதியில் மறிக்கப்பட்டு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிவிக்கப்படுவதாவது,
நேற்றிரவு(27) நத்தார் ஒன்று கூடல் நிகழ்வு முடித்து அதில் கலந்துகொண்ட ஏழு அருட்தந்தையர்களில் ஒருவரை தவிர ஏனையவர்கள் தங்களின் அருட்தந்தையர்களுக்குரிய ஆடைகளுடன் கார் ஒன்றில் வீடு
திரும்பிக்கொண்டிருந்த போது சுமார் 10 பேர் இளைஞர் குழுவொன்று மது
போதையில் மயில்வாகனபுரத்தில் வீதியில் மறித்து பணம் கோரியுள்ளனர்.
இதற்கு அருட்தந்தையர்கள் மறுப்புத் தெரிவித்த போது அவர்கள் பயணித்த வாகனம் அடித்து உடைக்கப்பட்டதோடு, அருட்தந்தையர்கள் மீதும் தாக்குதல் முயற்சி மேற்கொள்ள்ப்பட்டது.
இதன் போது அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொண்டனர்.
மேலம் சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தற்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
21 minute ago
26 minute ago
34 minute ago