Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
இலங்கை போக்குவரத்துச் சபையின் முல்லைத்தீவு சாலைக்குச் சொந்தமான பஸ்ஸை கடத்திச் சென்ற இருவரை செவ்வாய்க்கிழமை (25) இரவு 7.30 மணியளவில் கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய்க்குச் சென்றடைந்த பஸ்ஸை, அதன் சாரதியும், நடத்துநரும் கொக்கிளால் பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு கணக்குப் பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, அங்கிருந்த இருவர் பஸ்ஸை இயக்கி அதனை கடத்திச் சென்றுள்ளனர்.
பஸ் கடத்திச் செல்லப்படுவதை கண்ட சாரதியும், நடத்துநரும் அங்கிருந்த இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தினர். உடனடியாக பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. விரைந்து சென்ற இராணுவத்தினர் கடத்திச் செல்லப்பட்ட பஸ்ஸை 15 கிலோமீற்றர் தூரத்தில் கோம்பாவில் என்னும் இடத்தில் வைத்து கைப்பற்றினர். கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago