2025 மே 05, திங்கட்கிழமை

இனிவரும் காலங்களில் பட்டினிச் சாவு வரும்

Freelancer   / 2022 ஜூன் 06 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

பசளையை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது, கஞ்சியாவது குடித்து மக்கள் வாழ்வார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

விவசாயிகள் சேமித்து வைத்த அரிசிகள் அனைத்தும் இரண்டு , மூன்று மாதங்களில் முடிவடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. 

இனிவரும் காலங்களில் பட்டினிச் சாவு வருவதற்கான வாய்ப்புகளே கூடுதலாக உள்ளது. 

சாதாரணமாக உழைக்கின்ற அன்றாட கூலி செய்கின்ற மக்களுடைய நிலைமை மிகவும் மோசமாக, பரிதாபமாக இருக்கின்றது. 

அரசாங்கம் முதலிலே பசளையை இறக்கி விவசாயிகளுக்கு கொடுக்கின்ற போது கஞ்சியாவது குடித்து மக்கள் வாழ்வார்கள்.

இந்திய பாரத பிரதமர் இவ் விடயத்திலே கவனம் செலுத்தி உடனடியாக பசளையை தந்துதவுமாறு கேட்டிருக்கின்றேன். 

பசளை கிடைக்கின்ற போது ஓரளவிற்காவது பட்டினியை நிவர்த்தி செய்கின்ற வாய்ப்புகளை உண்டு பண்ணலாம் என்பது எனது ஆலோசனை என மேலும் தெரிவித்தார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X