Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2016 நவம்பர் 20 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சியில் பெய்துவருகின்ற அடைமழை காரணமாக, இரணமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகளில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தி இருப்பதாக, கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், கிளிநொச்சியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியதனை அடுத்து, இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகளில் தடங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “மழை என்பதைக்
காரணம் காட்டி, இரணைமடுக் குளத்தின் புனரமைப்பு வேலைகளை பிற்போட முடியாது. இதுதான் இங்குள்ள பெருமளவான மக்களின் வாழ்வாதாரத்தினைக் கொண்டுசெல்ல உதவுகின்றது என்பதை, நாம் நன்றாக அறிந்துள்ளோம். மழைக் காலம் என்பதால், குளத்தின் வெளிப்பாதை, பாலம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. குளத்தின் உட்கட்டுமானப் பணிகளை முடிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்” என்றார்.
“கிளிநொச்சியில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதனால், எமது பணிகளைத் திட்டமிட்டு, வழமைபோல் செய்துகொண்டுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சியின் இரணைமடுக் குளத்தை அண்டிய பகுதியில் 120.8 மில்லிமீற்றர் மழையும் அக்கராயன் குளத்தை அண்டிய பகுதியில் 139.3 மில்லிமீற்றர் மழையும், கரியாலை நாகபடுவான் குளத்தினை அண்டிய பகுதியில் 131.7 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியுள்ளது.
இதனால், குறித்த குளங்களினது நீர்மட்டங்களின் அளவுகள் உயர்வடைந்துள்ளன. குறித்த குளங்களின் நீர்மட்டங்களின் வாசிப்புக்கள், இரணைமடுக்குளம் - 2.9 அடி, அக்கராயன் குளம் - 15.6 அடி, கரியாலை நாகபடுவான் குளம் - 3.5 அடி எனப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
3 hours ago
4 hours ago