2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இரணைமடுவிலிருந்து நீர் வரும்

Gavitha   / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி இரணைமடுக்குளம் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றாலும் இவ்வாண்டுக்குரிய காலபோக நெற்செய்கைக்குரிய நீர் விநியோகம் அடுத்தாண்டுக்கான சிறுபோகத்துக்கான நீர் விநியோகம் ஆகியன சிறப்பாக இடம்பெறுமென கிளிநொச்சி நீர்;ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இரணைமடு புனரமைப்புக்காக இவ்வாண்டு சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஈடுபடவில்லை.

ஆனாலும் இனிவரும் காலபோகம், சிறுபோக நெற்செய்கைகளில் விவசாயிகள் ஈடுபடக்கூடிய வகையில் குளப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புனரமைப்புப் பணிகளில் சில இடையூறுகள் இடம்பெற்றாலும் புனரமைப்புப் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குளத்தின் நீர் விநியோகம் தொடர்பாக விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .