2025 ஜூலை 26, சனிக்கிழமை

இரணைமடு வற்றியது: பிரதான வாய்க்கால் ஆழப்படுத்தப்படுகிறது.

எஸ்.என். நிபோஜன்   / 2017 ஜூலை 29 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்தமையால், பிரதான வாய்க்காலை ஆழப்படுத்தும்  பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

 இரணைமடு குளத்தின் கீழ் 800 ஏக்கர் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையால், பயிர்செய்கை நிலங்களுக்கு, நீர் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரணைமடு திட்ட விவசாயிகள் இணைந்து, குளத்தின் பிரதான  வாய்க்காலை  ஆழப்படுத்தி, நீரை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக உழவு இயந்திரங்கள், மனித வலு ஆகியன பயன்படுத்தப்பட்டு வருகின்றது,

இவ்விடயம் தொடர்பில், இரணைமடு விவசாய சம்மேளன செயலாளர் மு.சிவமோகன் கருத்துத் தெரிவிக்கையில்,

நீர் பற்றாக்குறை காரணமாக குளத்தின் வாய்க்கால் பகுதி ஆழப்படுத்தப்பட்டு வருவதாகவும், விவசாயிகள், நீர்பாசன திணைக்களம் ஆகியன இதற்கு ஒத்துழைப்பு  வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறித்த பணிக்காக அரசாங்க நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனவும் முழுமையாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X