Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஒக்டோபர் 14 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
அநுராதபுரம் சிறைச்சாலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளை, அவர்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மூவர் அடங்கிய குழுவினர், புதன்கிழமை(14) மாலை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று, சந்தித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை சார்பாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை மற்றும் பொறியியலாளர் ஏ.தேவானந் ஆகியோரே அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 30 அரசியல் கைதிகளை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இதன் போது, சுமார் 20 முதல் 30 வருடங்கள் வரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை, பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குறித்த அரசியல் கைதிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்த அரசியல் கைதிகள், மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்கள் திடீர் சுகவீனமடைந்து உள்ளமை தமது விடுதலைக்கு வலது கரம் உடைந்தது போன்று உள்ளது என கவலை தெரிவித்துள்ளனர்.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025