2025 ஜூலை 09, புதன்கிழமை

உலக சிறுவர் தின விழா

George   / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-காயத்திரி விக்கினேஸ்வரன்

பிரதேச அபிவிருத்தி வங்கியின் யாழ்ப்பாணக் கிளையின் உலக சிறுவர் தினம், வியாழக்கிழமை (03) பிற்பகல் 3.30 மணிக்கு யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

வங்கியின் மாவட்ட முகாமையாளர் எஸ்.அருளானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொதுமுகாமையாளர் பஸ்நாயக், சிறப்பு விருந்தினர்களாக பிராந்திய அபிவிருத்தி முகாமையாளர் சிமனசிங்க, அநுராதபுரக் கிளையின் முகாமையாளர் கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறுவர்களின் ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தமது வங்கிக் கணக்கினை வைத்திருக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .