2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நடைபவணி

Freelancer   / 2022 ஜூன் 01 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெம்பர்ட்

உலக புகையிலை எதிர்ப்பு  தினமான நேற்று முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் விழிப்புணர்வு நடைபவணி ஒன்று இடம்பெற்றது.

முசலி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம். ஒஸ்மன் சாள்ஸ்  தலைமையில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நடை பவனியில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், சிலாவத்துறை வைத்தியசாலை வைத்தியர் உட்பட்ட ஊழியர்கள்  , பிரதேச சபை,பிரதேச செயலக ஊழியர்கள் , முச்சக்கர வண்டி  சங்க உறுப்பினர்கள், சிலாவத்துறை மதரஸா மாணவர்கள் , பிராந்திய தொற்றா நோய் வைத்திய அதிகாரிகள் மற்றும்  முசலி வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார  பரிசோதகர்கள், குடும்ப  நல உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அலுவலர்கள் என பலர்  கலந்து கொண்டனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .