2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உலமா சபையினர் - ஆயர் விசேட சந்திப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 24 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்-

 

மன்னார் மாவட்ட ஜமியத்துல் உலமா சபையினருக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று, மன்னார் ஆயர் இல்லத்தில், நேற்று (24) மாலை 6.30 மணியளவில் நடைற்றது.

மன்னார் மாவட்டத்தில், கத்தோலிக்க, முஸ்லிம் மக்களின் நல்லுறவு தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென்ற நோக்குடனேயே, குறித்த சந்திப்பு

இடம்பெற்றுள்ளது.

இதில், மன்னார் மாவட்ட மாவட்ட ஜமியத் உலமா அமைப்பினர்கள், சிரேஷ்ட சட்டத்தரணி எம்.சபுர்தீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹீனைஸ் பாறுக், மன்னார் மூர் வீதி, உப்புக்குளம் பெரிய பள்ளிவாசல்களின் மௌலவிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு மன்னார் மறைமாவட்ட ஆயருடன் கலந்துரையாடினர்.

இதன்போது, நாட்டில் இடம்பெற்ற துக்ககரமான சம்பவத்துக்கு அனுதாபத்தையும் கண்டணத்தையும் தெரிவித்த மன்னார் ஜமித்துல் உலமா அமைப்பினர், மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள், கத்தோழிக்க மக்களுக்கு இடையிலான உறவு இத்தகைய செயலால் சீர்கெட்டு விடக்கூடாதெனவும் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன், நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக பள்ளிவாசல்கள், கோவில்களில் சமயச் சொற்பொழிவுகள் இடம்பெற வேண்டுமென, ஆயரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .