Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
குறிப்பிட்ட பிராந்திய ஊடகவியலாளர்களை புறக்கணித்து, வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களை அழைத்து ஊடகவியலாளர் சந்திப்பு நடத்திய சம்பவமொன்று, முல்லைத்தீவில், இன்று (11) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால், இன்று (11) ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்டத்தின் அரச ஊடகவியலாளர் ஒருவருக்கு மாத்திரம் அழைப்பு விடுத்து, ஏனையோரைப் புறக்கணித்து, வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை அழைத்து இரகசியமான முறையில் ஊடக சந்திப்பு நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர், பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால், வவுனியாவில் இருந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சில ஊடகவியலாளர்களை மாத்திரம் அழைத்து, ஊடக சந்திப்பை நடத்தி வருவதாக, முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்
அத்துடன், குறித்த மாவட்ட முகாமையாளர், விமல் வீரவன்ச, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அமைச்சராக இருந்த காலத்தில், வடக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டவராவார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசத்தில், “வெலிஓயா” என்ற பெயரில் இடம்பெறுகின்ற சிங்கள குடியேற்றத் திட்டங்களில் அதிகளவான வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறித்து, ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பலாம் என்ற காரணத்தால், தமிழ் ஊடகவியலாளர்களை, அவர் புறக்கணித்திருக்கலமெனவும், மாவட்ட ஊடகவியலாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
29 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago