2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஊடகவியலாளர் நடேசனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்

Freelancer   / 2022 ஜூன் 01 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜயரத்தினம் சரவணன்

கடந்த 2004ஆம் ஆண்டு மட்டக்களப்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனுடைய 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில், முல்லைத்தீவு ஊடக அமையத் தலைவர் சண்முகம் தவசீலனின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 

அந்தவகையில் ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் திருவுருவப்படத்துக்கு நினைவுச் சுடரேற்றி, மலர் வணக்கம் மற்றும், அகவணக்கம் செலுத்தப்பட்டு, உணர்வுபூர்வமாக இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இந்த அஞ்சலிநிகழ்வில் முல்லைத்தீவு ஊடக அமையத்தைச் சார்ந்த ஊடகவியலாளர்கள், சிவில் சமூக மற்றும், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .