Freelancer / 2022 ஜூன் 04 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா - பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள எரிவாயுக்கள் விநியோகஸ்தருக்கு வழங்குவதற்கென்று விநியோகிக்கப்பட்ட 20 எரிவாயுக்களையும் பதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த எரிவாயு விநியோகஸ்தரினால் எரிவாயுக்களை பதுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி, மாவட்ட செயலக அதிகாரிகளின் தலையீட்டை அடுத்து மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது .
வவுனியா பட்டாணிச்சூரில் நேற்று அதிகாலை முதல் எரிவாயுவை பெற்று கொள்வதற்காக காத்திருந்த மக்களுக்கு வழங்குவதற்கு என்று 20 எரிவாயுக்கள் எடுத்து வரப்பட்டுள்ளது .
இதை காத்திருந்த மக்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பு செய்து குறித்த எரிவாயுவைப் பதுக்குவதற்கு விநியோகஸ்தரினால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அங்கு நீண்டநேரமாக காத்திருந்த மக்கள் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளின் தலையீட்டால் காத்திருந்த மக்களுக்கு 10 மணியளவில் விநியோகம் செய்து வைக்கப்பட்டது . (R)
19 minute ago
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
47 minute ago
2 hours ago