2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஏல விற்பனை இடைநிறுத்தம்: ஒரு மாத கால அவகாசம்

Gavitha   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வன்னி மாவட்ட விவசாயிகள், விவசாயத்தை முன்னெடுத்து செல்வதற்காக, அரச வங்கியில் அடகு வைத்திருந்த நகைகள், பகிரங்க ஏலத்தில் விடப்படவிருந்த நிலையில், குறித்த ஏல விற்பனை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நகைகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இம்மாவட்டத்திலுள்ள விவசாயிகள், பண வசதி குறைவாக காணப்பட்டதால் தமது நகைகளை அடகு விவசாயத்தை மேற்கொண்டனர்.

திடீரென ஏற்பட்ட வரட்சிக்  காரணமாக, விவசாயச் செய்கை பாதிப்படைந்ததனால் விவசாயிகள்  நட்டமடைந்தனர்.

இதனால், வங்கிகளில் அடகு வைத்த நகைகளை மீள பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், அடகு வைக்கப்பட்ட நகைகள் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும்  பகிரங்க ஏலத்தில் விடப்படும் என்ற அறிவித்தலை வங்கி நிர்வாகம் விடுத்திருந்தது.

இவ்விடயம் நாடாளுமன்ற  உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டதை தொடர்ந்து அவர் இவ்விடயத்தை,  வெளிநாட்டு வர்த்தக அமைச்சரான மலிக் சமர விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுச் சென்றார்.

விவசாயிகளின் நகைகளை மீளப்பெற ஒரு மாத கால அவசாகம் வழங்குமாறு, வங்கியியலாளர்களிடம் அமைச்சர் மலிக் சமர விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக வங்கி நிர்வாகம், விவசாயிகள் நகைகளை மீளப்பெற ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .