Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 04 , பி.ப. 01:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் கட்சியின் வன்னி மாவட்ட நிர்வாகத்தில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்கான புதிய நியமனங்களும் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட பிரதம அமைப்பாளராக மன்னார் கொண்டச்சியைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் இளைஞர் சேவைகள் பணிப்பாளருமான ஏ.சி.அப்துல் கபூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட முஸ்ஸிம் பிரதேசங்களின் சிரேஷ்ட முகாமையாளராக மன்னார் மூர்வீதியைச் சேர்ந்த ஏ.எஸ்.முஹம்மது பஸ்மி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமனம் செய்யப்பட்டள்ளார்.
கடந்த யூலை மாதம் 24ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் வன்னி மாவட்ட முஸ்ஸிம் பிரதேசங்களின் சிரேஷ்ட முகாமையாளராக குறித்த நியமனம் ஏ.எஸ்.முஹம்மது பஸ்மிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்டம் முழுவதுக்குமான முகாமையாளராக ரஞ்ஜீத் பெர்னான்டோ, வவுனியா மாவட்ட அமைப்பாளராக கே.கருனாதாச, மன்னார் மாவட்ட சிரேஷ்ட தலைவராக சின்னத்தம்பி பொன்னையா, மன்னார் மாவட்ட அமைப்பாளராக ஏ.எஸ்.முஹம்மது பஸ்மி, முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளராக ஜமால்தீன் றிசான் ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தினால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்பதவிகளுக்கு மேலாக மன்னார் தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார சபையொன்று விரைவில் உருவாக்கப்பட்டு குறித்த சபைக்கு 12 உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டியுள்ள நிலையில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை கருத்திற்கொண்டு வன்னி மாவட்டத்தில் குறித்த நியமனங்களை வழங்கியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
7 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
15 Aug 2025