Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 24 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இளைஞர்களை இலக்குவைத்தும், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செயற்பட்டு வருகின்றமை புலனாய்வுத் தகவல்கள் ஊடாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து நேற்று மாலை யாழ். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு மந்துவில் பிரதேசத்தில் இரவு 7.30 மணியளவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளார்கள்.
இவரிடம் இருந்து 455 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் இவர் பயணித்த உந்துருளியும் அதிரடிப்படையினரால் கைப்பெற்றப்பட்டுள்ளது.
உப்புமாவெளி அளம்பில் பகுதியினை சேர்ந்த 26 அகவையடைய நபவே இவ்வாறு கைது செய்யப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதி சட்ட நடவடிக்கையினை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
05 May 2025