2025 மே 05, திங்கட்கிழமை

ஒட்டுசுட்டான் பிரதேச மக்களுக்கான அறிவுறுத்தல்

Freelancer   / 2022 ஜூன் 29 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் எரிபொருளை பெறுவது தொடர்பில் அறிவித்தல் ஒன்றை பிரதேச செயலாளர் விடுத்துள்ளார்.

எரிபொருள் அட்டை பெற்றுக் கொள்வதற்காக தாங்கள் கொண்டு செல்ல வேண்டிய  ஆவணங்கள்:

01. குடும்ப அட்டை

02. வாகனப் புத்தகம்

03. இவ்வருட வாகன வரி அனுமதிப் பத்திரம்( Tax) 

04. இவ்வருடத்துக்கான வாகனக் காப்புறுதி அனுமதிப் பத்திரம்(Insurance)

05. தேசிய அடையாள அட்டை

எரிபொருள் அட்டை வழங்கப்படுவதற்கான நிபந்தனைகள்:

01. வாகனம் பாவனையில் இருத்தல் வேண்டும்.

02. ஒரு வாகனத்திற்கு ஒரு அட்டை மட்டும் வழங்கப்படும். 

03. வாகன உரிமையாளர் பெயரில் மட்டும் அட்டை வழங்கப்படும். 

04. பெயர் மாற்றங்களை உடன் செய்து கொள்ளவும்.

05. முல்லை மாவட்டத்திற்கு உட்பட்ட அரசாங்க நிறுவனங்கள் , கூட்டுதாபனங்கள், திணைக்களங்கள், தனியார் வங்கிகள்,  போன்றவர்களுக்கு அவர்கள் கடமையாற்றும் நிறுவனங்களால் எரிபொருள் அட்டை வழங்கப்படும்.

06. மேற்குறிப்பிட்ட பகுதியினர் தவிர்ந்த அனைத்து பொது மக்களுக்கும் கிராம அலுவலர் பிரிவுகளில் வழங்கப்படும். 

07. உரிய நபர் நேரில் வருகை தர வேண்டும்.

08. எரிபொருள் அட்டை தொலைந்தால் மீண்டும் வழங்கப்பட மாட்டாது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் இதே நிபந்தனைகளுடன் எரிபொருளை பெறுவதற்கான பங்கீட்டு அட்டை வழங்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X