Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு ஒதியமலை பகுதியில், தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவிகரிப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒதியமலை பகுதியில், தமக்குச் சொந்தமான காணிகளில் இருந்து அப்பகுதி மக்கள், கடந்த 1983ஆம் ஆண்டு மற்றும் அதன் பின்னரான யுத்த சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில், ஒதியமலை கிராமங்களை அண்டிய பகுதிகளில், உள்ள கிராமங்களில் தற்போது வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.
ஒதியமலை மக்களின் காணிகளை உள்ளடக்கிய வகையில், வனவள திணைக்களம், வனவளத்திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளாக சில காணிகளை அடையாளப்படுத்தியுள்ளது.
அத்துடன், இங்கு தற்போது குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மேற்கொண்டு வரும் விவசவாய செய்கைக்களை, வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு, வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பாதுகாப்பு வேலிகள் அமைப்பதற்கு, காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இவ்விடயங்கள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மக்கள்; இப்பகுதி கிராம அலுவலரிடம் முறையிட்டுள்ளனர்.
இதேவேளை, இப்;பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த விவசாயக் குளமான கருவேப்பங்குளத்தை, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுச் சென்று, தங்களது காணிகளை சுவிகரிப்பதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் மேற்கொள்;ளப்பட்டு வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பூர்வீக நிலங்களை மீட்டு, தம்மை மீள்குடியேற்றுமாறும், வாழ்வாதார பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கு உரிய தரப்புக்கள், அரசியல்வாதிகள் வழிவகை செய்து தர வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
08 Jul 2025