2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஓமந்தையில் மாபெரும் நடமாடும் சேவை

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - ஓமந்தை கமநல சேவை திணைக்களத்தில், இன்று, மாபெரும் நடமாடும் சேவையொன்று நடைபெற்றது.

ஓமந்தை பிரதேச விவசாயிகளின் விவசாய நடவடிக்கை தொடர்பான  குறைபாடுகளை தீர்க்கும் நோக்கிலேயே, இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.

வவுனியா கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில், விவசாயிகளின் வயல் காணிகள் தொடர்பான பிரச்சினைகள், காப்புறுதி தொடர்பான பிரச்சினைகள், குளங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டன.

இந்த நடமாடும் சேவையில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கலைச்செல்வன், கமநல அபிவிருத்தி குழு தலைவர்  சின்னராசா மற்றும் பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .