சண்முகம் தவசீலன் / 2018 மார்ச் 08 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (08) ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையிலும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, “அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என்பதை 3 தடவையாக தம்மை சந்தித்த ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும்” என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் மதகுருமார், சிவில் சமூக பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago