2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிணறுகளுக்கு உரிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவில்லை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 01 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி முகமாலை பகுதியில் மீள்குடியேறிய மக்களுக்கு ஜப்பானிய அரசின் ஜென் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு வரும் கிணறுகளுக்கு உரிய பயனாளிகள் இதுவரை தெரிவு செய்யப்படவில்லை எனவும் இதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம அபிவிருத்திச் சங்கம் தெரவித்துள்ளது. 
 
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கே.என்-93 கிராம அலுவலர் பிரிவிலுள்ள முகமாலை கிராமத்தில் தற்போது 120 வரையான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
 
2013ஆம் ஆண்டு இந்தப்பகுதியில் 21 தனிநபர் கிணறுகள் சோபா நிறுவனத்தினால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிந்தன.
 
தற்போது இரண்டு குடும்பத்துக்கு ஒரு கிணறு என்ற அடிப்படையில் ஜென் நிறுவனத்தால் 5  இலட்சம் ரூபாய் செலவில் கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தன. இதற்கு உரிய பயனாளிகள் தெரிவு செய்யப்படவில்லை எனவும் பயனாளி தெரிவில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகவும் இது தொடர்பாக மாவட்ட செயலர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு மகஜர்களை கையளிக்கவிருப்பதாகவும் இந்த பயனாளிகள் தெரிவு குறித்த கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் செய்யப்படவில்லை எனவும் குறித்த கிராம அபிவிருத்திச்சங்கத்தினர் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .