2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

George   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இலங்கையிலுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை(16), கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இக்கவனயீர்ப்பு போராட்டம் ஏ-9 வீதியில் உள்ள பழைய மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது.

இப்போராட்டம், பழைய மாவட்ட செயலக முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட செயலகம் வரை சென்று கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்ட செயலர் ப.சத்தியசீலனிடம் ஜனாதிபதிக்கான மகஜர் கையளிக்கப்பட்டது.

இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், இறுதி யுத்தத்தில் காணாமற் போனோரின் உறவினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், 'நீண்ட காலமாக அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்.

அவர்கள் தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் 20 மேற்பட்டோர் தமது உடல் நலம் குன்றிய நிலையில் உள்ளனர். அவர்களின் விடுதலை தொடர்பிலும், பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலும் அரசாங்கம் நல்ல முடிவினை எடுக்க வேண்டும். அதுவரை இப்போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்' என தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .