Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலை நிலா பல்லவராயன் கட்டு கிரமப்பகுதியிலுள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கேரளா கஞ்சா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை முழங்காவில் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து முழங்காவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.ஜே.ஆரிய வன்ச தலைமையிலான பொலிஸ் குழுவினர், குறித்த பகுதிக்குச் சென்று தேடுதல்களை மேற்கொண்ட போது ஒரு தொகுதி கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.
குறித்த கஞ்சா, கேரளா கஞ்சா எனவும் 25 கிலோகிராம் எடை கொண்டது எனவும் முழங்காவில் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, முழங்காவில் குமிழமுனை மற்றும் சோலை நிலா பல்லவராயன் கட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மீட்கப்பட்டுள்ள கஞ்சா, கடல் மார்க்கமாக இந்தியாவில் இருந்து இந்திய மீனவர்களினால் கொண்டு வரப்பட்டு, தம்மிடம் விற்பனைக்காக தந்ததாக குறித்த சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025