2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

George   / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தலைமன்னார் சுவாமித்தோட்டம் பகுதியில் வைத்து சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை கைப்பற்றிய பொலிஸார், சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, காலை 9.45 மணியளவில் இவர்களை சுற்றிவளைத்ததாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் ஹெசிகன் தெரிவித்தார். 'மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டுச் செல்லப்பட்ட 2 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 4 கிலோ 50 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகளே கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர்கள் இருவரையும் மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளோம்' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .