Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
உலக புள்ளிவிவரவியல் தின நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றது.
இதன்போது, உரையாற்றிய மாவட்டச் செயலர்,
'சரியான புள்ளி விவரங்களை பெறுவதன் மூலம் எமது மாவட்டத்தின் தேவைகளை இலகுவாக அடையாளங் கண்டுகொள்ள முடியும். அதன் மூலம் வேலைத்திட்டங்களை மேற்கொள்வது இலகுவாக இருக்கும். புள்ளிவிவரங்களில் சரியான தகவல்கள் திரட்டப்படுதல் முக்கியமானது' என்றார்.
ஐக்கிய நாடுகள் சபை, 2015 உலக புள்ளி விபரவியல் தினத்தை 'சரியான தரவுகள் ஊடக மிகச் செழிப்பானதொரு வாழ்க்கை' என்னும் தொனிப்பொருளில் நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலர்கள், கிராமமட்ட அமைப்புக்களைச் சேர்;ந்தவர்கள், உத்தியோகத்தர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025