2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கசிப்பை முற்றாக ஒழிப்பது தொடர்பாக கூட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வன்னேரிக்குளத்தில் கசிப்பை முற்றாக ஒழிப்பது தொடர்பாக கூட்டமொன்று நேற்று (14) வன்னேரிக்குளம் கிராம அலுவலர் ப.சபாரட்ணம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

அண்மைக் காலமாக வன்னேரிக்குளத்தில் கசிப்பு உற்பத்தி அதிகரித்து இருப்பதன் காரணமாக, சமூக வன்முறைகள் அதிகரித்துள்ளன. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வன்னேரிக்குளத்தில் இருந்து கசிப்பினை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கூட்டம் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில், கசிப்பால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகள் தொடர்பாக தொடர்ச்சியான விழிப்புணர்வு மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் வன்னேரிக்குளத்தில் கசிப்பைக் கட்டுப்படுத்துங்கள் என அக்கராயன் பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் ஒன்;று திரண்டதையடுத்து தகவல் அறிந்த கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் மக்களைச் சந்தித்தார். மக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒருமாத காலம் பொலிஸ் காவல் பிரிவு இயங்குதல், தொடர்ச்சியான பொலிஸ் நடமாடும் சேவைகள் இடம் பெற்ற போது கசிப்பு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

ஆனால் தற்போது கிராமத்தில் கசிப்பி உற்பத்தி அதிகரித்திருப்பதன் காரணமாக பொலிஸாரின் உதவியினை நாடுவது எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வன்னேரிக்குளம் மகா வித்தியாலய அதிபர் எஸ்.நடேசலிங்கம், வன்னேரிக்குளம் பிரதேச சபை உறுப்பினர் நா.செல்வநாயகம், ஆசிரியர் ஐ.சண்முகராஜா மற்றும் வன்னேரிக்குளம் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X