2025 மே 14, புதன்கிழமை

கடற்கரையில் தகனம் செய்யுமாறு உத்தரவு

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த விகாரையின் விகாராதிபதி  கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரர், கடந்த 21 ஆம் திகதி புற்றுநோயினால் மஹரகம வைத்தியசாலையில் உயிரிழந்தார்

இவரது உடலை முல்லைத்தீவு குறித்த ஆலய வளாகத்தில் தகன கிரியைகள் மேற்கொள்வதற்கு ஆலய வளாகத்தில் எதிர்ப்பு தெரிவித்து பொலிசார் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு வழங்கியிருந்தது

இந்நிலையில் இன்று காலை குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .