Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 02 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா மகாகச்சகொடி பகுதியை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தரின் குடும்பத்தினரான 8 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்தார்.
வெலிசறை கடற்படைமுகாமில் கடமையாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனோ தொற்றுஇருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தபட்டிருந்தது.
வவுனியா மகாகச்சகொடியை சேர்ந்த குறித்த கடற்படை வீரரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் என 9 பேர் பம்பைமடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த 9 பேருக்குமான பிசிஆர் பரிசோதனைகளிற்கான மாதிரிகள் சேர்ககும் பணி நேற்றுமுன்தினம் இடம்பெற்றிருந்தது. அதற்கான முடிவுகள் நேற்றயதினம் 1.5 வெளிவந்திருந்தது.
அதனடிப்படையில் கடற்படை உத்தியோகத்தரின் குடும்ப உறவினர்களான 8 பேருக்கு கொரோனோ தொற்று இல்லை என்று பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், ஒருவரின் முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
22 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago