2025 ஜூலை 09, புதன்கிழமை

கடலில் தத்தளித்த மீனவர் மீட்பு

Niroshini   / 2016 டிசெம்பர் 03 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்  

கிளிநொச்சி பூநகரிக் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த கடற்றொழிலாளர் ஒருவர் இன்னொரு கடற்றொழிலாளரினால் மீட்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் பாசையூரைச் சேர்ந்த மூன்று பெண்பிள்ளைகளின் தந்தையான பெனடிக்ற் சனிஸ்லாஸ், (வயது 40) என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டார்.

வியாழக்கிழமை (01)  இரவு யாழ்ப்பாணம் பாசையூரில் இருந்து ஒரு மீன்பிடிப் படகில் மூவர் கடலுக்குச் சென்றுள்ளனர்.  காற்றுடன் கூடிய மழை காரணமாக படகு கடலில் மூழ்கியுள்ளது.

வலையிலும் அதன் மிதப்புகளிலும் மிதந்தவாறு கடலில் இருந்தபோது நேற்று வெள்ளிக்கிழமை (02) குறித்த மீனவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

 பாதுகாப்பாக மீட்கப்பட்ட இவர், பூநகரி பிரதேச செயலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு பூநகரி இடர் முகாமைத்துவப் பிரிவினரால் முதலுதவிகள் அளிக்கப்பட்டு யாழ்ப்பாணம் - பாசையூரில் உள்ள அவரது வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 

தன்னுடன் கடலுக்கு வந்த ஏனைய இருவரின் நிலைமை தனக்குத் தெரியவில்லை என சனிஸ்லாஸ் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .