Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
'எமது மாவட்டத்தில் உள்ள கடற்பகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை பாதுகாத்து கொள்வதன் மூலம் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிறப்பாக கொண்டு செல்லமுடியும்' என கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் திங்கட்கிழமை (21) தெரிவித்துள்ளார்.
கடற்கரை சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையும் ஜனாதிபதி செயலகமும் இணைந்து செயற்படுத்தும் கரையோரச் சூழலை பாதுகாக்கும் வகையிலான சிரமதானப்பணிகளின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா கடற்கரையோரப்பகுதியில் திங்கட்கிழமை (21)நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'வடமாகாணத்;தில் கடற்;கரையோரப் பகுதிகளே பிரதானமாக காணப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டம் சுமார் 127 கிலோ மீற்றர் கரையோரப்பகுதிகள் கொண்டதாக காணப்படுவதுடன் மாவட்டத்தில் உள்ள 95 கிராம அலுவலர் பிரிவுகளில் 28 கிராம அலுவலர் பிரிவுகள் கடற்கரையோரப்பகுதிகளை கொண்ட பகுதிகளாக காணப்படுகின்றது.
எமது மாவட்டத்தைப் பொறுத்த வரையில் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் காணப்படுகின்றது. அதற்கு அடுத்தபடியாக கடற்றொழில் காணப்படுகின்றது.
இந்நிலையில் தற்போது கடற்கரைகள் மாசடைந்து வருகின்;றன. அதாவது பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள் கண்ணாடிப் போத்தல்கள் போன்ற கழிவுகள் இங்கு வீசப்படுகின்றன. இவை உக்கி அழிவதற்கு பல நூறு ஆண்டுகள் எடுக்கும். இதனால் கடற்கரையோரங்களை பாதுகாக்கும் விசேட செயத்திட்டம் முன்னெடுக்கப்;பட்டு வருகின்றது' என்றார்.
'கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாத்துக்கொள்வதன் மூலம் கடற்தொழிலை வாழ்வாதாரத்தொழிலாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கட்டியொழுப்ப முடியும். கடற்பாசிகள் போன்றன பாதுகாக்கப்பட வேண்டும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மிகப்பெரும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கும் இளைஞர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகமிக அவசியமாகவுள்ளது. அத்துடன் எமது மாவட்டம் ஓர் சுற்றுலாத்துறையை நோக்கி நகர வேண்டியுள்ளது. இதனால் கரையோரப் பகுதிகளும் ஏனைய பகுதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago