Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 09 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - ஓட்டுசுட்டான், பெரிய இத்திமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் அறுக்கப்படுவதாக ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதை தொடர்ந்து நேற்று மாலை சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் அறுத்துக்கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்துள்ளார்கள்.
பலர் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி கணவனை கைது செய்த பொலிசாரை கடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதில், கணவன் தப்பியோடிய நிலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை,பொலிஸாரை கடித்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மரக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடி காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
05 May 2025