2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் நிதியுதவி

Freelancer   / 2022 ஜூன் 28 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு. தமிழ்ச்செல்வன்

வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கண்ணிவெடி அகற்றும் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க ஜப்பான் அரசு சுமார் 244 மில்லியன் ரூபாய் நிதியுதவியினை வழங்கியுள்ளது. 

ஜப்பான அரசின் இந் நன்கொடை மூலம் டாஸ் கண்ணி வெடி அகற்றும் பிரிவினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நன்கொடை வழங்கலுக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (28) காலை  கிளிநொச்சி - முகமாலை பகுதியில் அமைந்துள்ள DASH செயற்பாட்டு பகுதியில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் DASH இன் நிகழ்ச்சி முகாமையாளர் ஆனந்த சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டு கைச்சாத்திட்டனர்.

2010 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் DASH இனால் 15 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில்  கண்ணி வெடிகள் அகற்றப்பட்டிருந்தன. இதில் ஜப்பானிய அரசின் GGP உதவித் திட்டத்தினூடாக 6.5  சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .