Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில் இயங்கிவரும் கருணா நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பல்வேறு நிகழ்வுகள் சனிக்கிழமை (10) இடம்பெற்றன.
ஏ-9 வீதியில் ஆரம்பிக்கப்பட்ட நினைவு நடைப்பயணம் கருணா நிலையத்தினை வந்தடைந்தது. தொடர்ந்து இலங்கை திருச்சபையின் பேராயரின் தலைமையில் திருப்பலி ஆராதனை ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு மிஷனரியாக வருகை தந்த கட்ஸின் அம்மையார், தனது பூர்விக சொத்துக்களை விற்று இலங்கையில் வறுமையில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டதே கருணா நிலையமாகும்.
இந்நிலையத்தில் வறுமையில் இருந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்பிள்ளைகளின் கல்வி மேம்பாடு முன்னெடுக்கப்பட்டதுடன், பல்வேறு சமூக பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்நிலையத்தில் பராமரிக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
கட்ஸின் அம்மையாரின் மறைவினை தொடர்ந்து இன்றுவரை யுத்தத்தின் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் குறித்த கருணாநிலையம் தனது பணிகளை முன்னெடுத்துள்ளது. யுத்தம் நிறைவுற்று மீள் குடியேறிய நிலையிலும், தற்போதும் கருணாநிலையத்தில் பல சிறுவர்கள் கல்வி நடவடிககைகளை முன்னெடுப்பதுக்கு உதவியாக உள்ளது.
இந்நிகழ்வில் கருணா நிலையத்தின் உருவாக்குனர் கட்ஸின் அம்மையாரின் நினைவுரைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி, வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025