2025 மே 20, செவ்வாய்க்கிழமை

’காலநிலைக்கேற்றவாறு பயிர்ச் செய்கையில் ஈடுபடவும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

காலநிலைக்கேற்றவாறு மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளும் காலபோக பயிர்ச் செய்கையில் ஈடுபடுமாறு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மாவட்டச் செயலகத்தில், நேற்று (17) நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மழை காலம் ஆரம்பித்துள்ளதால், விவசாயிகள் பயிர்ச் செய்கைகளில் கூடுதலாக ஈடுபட வேண்டுமெனவும் விவசாய முயற்சிகள் காரணமாகவே மாவட்டம் பொருளாதார ரீதியாக பலமடையுமெனவும் கூறினார்.

எனவே, காலநிலைக் கேற்றவாறு, அனைத்து நிலங்களையும் விவசாய முயற்சிகளுக்கு பயன்படுத்துமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X