2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி - பற்றைக்காட்டுக்குள் 130 கிலோ கேரள கஞ்சா

Freelancer   / 2022 மே 02 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

கிளிநொச்சி - பூநகரி, வேரவில் பிரதேசத்தில் உள்ள பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில், 130 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு வெளி இடங்களிற்கு அனுப்பும் நோக்குடன் பூநகரி வேரவில் பிரதேசத்தில் உள்ள பற்றைக்குள் மறைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளின் பெறுமதி இலங்கை மதிப்பில் 2.5 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த பொதிகள் ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X