2025 மே 22, வியாழக்கிழமை

கிளிநொச்சி வளாகத்தில் திடீர் சோதனை

Editorial   / 2019 மே 16 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன், மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

யாழ்ப்பாணப் பல்கலைகழத்தின் கிளிநொச்சி வளாகம், இன்று (16) காலை படையினரால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

கிளிநொச்சி படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 450 இராணுவத்தினரும் 90 பொலிஸாரும் இணைந்தே, இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

எதிர்வரும் வாரத்தில், பல்கலைகழகக் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, பல்கலைகழக நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இன்றுக் காலை 8.30 மணி முதல் இச்சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, ஊடகவியலாளர்களுக்கு, செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X