2025 மே 05, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் 208 கிலோ கேரள கஞ்சா மீட்பு

Freelancer   / 2022 ஜூன் 04 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி - விவேகானந்த நகரில் உள்ள வீடு ஒன்றிலிருந்து 208 கிலோ கேரள கஞ்சா
கைப்பற்றப்படடுள்ளது.

குறித்த வீட்டிடில் நேற்று (03) மாலை 6 மணியளவில் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்ட போது, சொகுசு வானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 208 கிலோ கேரள கஞ்சா கைப்பற்றப்படடுள்ளது.

சம்பவத்தில், மன்னாரிலிருந்து விவேகானந்த நகர் கிராமத்திற்கு வந்து வாடகைக்கு வீடு ஒன்றினை பெற்று  வசித்து வந்தவர்களே இந்த செயலை செய்திருப்பதுடன், இதில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வாகனம் மற்றும் சந்தேகநபரை சட்ட நடவடிக்கைகளுக்காக விசேட அதிரடிப்படையினர் கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X