Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 09 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சியில், அதிகரித்த மழை காரணமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதில் தொடர்ந்தும் சிரமம் ஏற்படுவதாக, கிளிநொச்சி மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கிளிநொச்சி முல்லைத்தீவு பொறியியலாளர் எந்திரி எஸ். சாரங்கன் தெரிவித்தார்.
பெய்து வரும் அதிகரித்த மழை காரணமாக, கிளிநொச்சி குளத்துக்கு அதன் நீரேந்து பகுதிகளில் இருந்து அதிகளவான கலங்கிய நீர் வருவதனாலேயே, குடிநீருக்கான நீரை சுத்திகரித்து வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மட்டுப்படுத்தப்பட்ட குடி நீர் விநியோகமே மேற்கொள்ளப்படும் எனவும், அவர் கூறினார்.
இதன் காரணமாக, பொதுமக்கள் நீரை சேமித்தும் சிக்கனமாகவும் பயன்படுத்துவதோடு, குடிநீருக்கு கொதித்தாறிய நீரை பயன்படுத்துமாறும், அவர் அறிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு 021-2283981 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago