Freelancer / 2023 ஜனவரி 12 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - யாழ்ப்பாணத்திற்கான இலங்கை போக்குவரத்து சபையின் சேவை கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கான பேருந்து சேவை யாழ்ப்பாணத்தில் இருந்து இரவு 7.00 மணியளவில் சேவையினைத் தொடங்கி சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், வெள்ளாங்குளம், மல்லாவி, மாங்குளம், வவுனியா ஊடாக கொழும்பை சென்றடையும்.
இதே வழித்தடத்தில் கொழும்பில் இருந்து இரவு 7.30 மணிக்கு யாழ்ப்பாணத்தினை நோக்கி இப்பேருந்து பயணிக்கும்.
இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி கிளையினால் இப்பேருந்து சேவை நடாத்தப்படுகின்றது.
கொரோனா காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த இப்பேருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025