2025 மே 17, சனிக்கிழமை

கோவிலுக்குள் படமெடுத்த புலனாய்வாளர்

Editorial   / 2020 மே 18 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை வழிபாடுகள், வவுனியா - குட்செட் வீதி கருமாரி அம்மன் கோவிலில், இன்று (18) நடைபெற்றது.

இதன்போது, அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு பிரார்தனையை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னரே, பொவிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் கோவிலுக்கு வௌியில் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆத்ம சாந்தி பூஜை  இடம்பெற்று கொண்டிருந்தபோது, கோவிலுக்குள் நுழைந்த புலனாய்வுப் பிரிவு அலுவலர் ஒருவர், நிகழ்வையும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களையும் புகைப்படம்  எடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .