2025 ஜூலை 09, புதன்கிழமை

சட்டவிரோத செயற்பாடுகள் குறைவடைந்துள்ளன

Administrator   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

அக்கராயன் பிரதேசத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் குறைவடைந்து உள்ளதாக அக்கராயன் பொலிஸ் நிலைய அதிகாரி ஹேரத் தெரிவித்தார்.

அக்கராயன் கெங்காதரன் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற கலைமகள் சனசமூக நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கசிப்பு, கஞ்சா ஆகிய போதைப்பொருள் பாவனைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்காக சிவில் பாதுகாப்புக் குழுக்களை கிராம ரீதியாக அமைத்துள்ளோம்.

மணல் அகழ்வும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காடழிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம். சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக, மக்கள் வழங்குகின்ற தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .