Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 21 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் நகர சபைக்குச் சொந்தமான இடத்தை பிரதேச சபைக்கு விட்டுக்கொடுக்க முடியாதென, மன்னார் நகர சபையின் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.
எனவே, மன்னார் நகர சபை கடற்கரை பூங்காக் காணி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மன்னார் நகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மன்னார் நகர சபையின் 13ஆவது அமர்வு, இன்றுக் காலை 10.30 மணியளவில், மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்டனி டேவிட்சன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னார் நகர சபை கடற்கரை பூங்காக் காணி தொடர்பாக பிணக்கு ஏற்பட்டுள்ளது. இது ஓர் எல்லைப் பிரச்சினையாகவே காணப்படுகின்றது. குறித்த பிரச்சினையானது தனிப்பட்ட முறையில் மன்னார் நகர சபையின் தலைவருக்கோ, செயலாளருக்கோ அல்லது உறுப்பினர்களுக்கோ இல்லை.
குறித்த பிரச்சினையானது நகர சபைக்கும், நகர சபை பிரிவுக்குட்பட்ட மக்களுக்குமான பிரச்சினை. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
மன்னார் நகர சபைக்குச் சொந்தமான ஓர் இடத்தை பிரதேச சபைக்கு விட்டுக்கொடுக்க முடியாது. மன்னார் நகர சபை எல்லை என்பது வெறுமனே 3 கிலோமீற்றர் நீளத்தாலும், 3 கிலோமீற்றர் அகலத்தாலும் உடைய ஒரு சபையாகவே நாங்கள் இப்போது பார்க்க வேண்டியுள்ளது.
உண்மையில் 28 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட இந்தச் சபையானது நிலப்பரப்பால் குறுகி சனத்தொகையால் அதிகரித்து காணப்படும் என்றால் நிர்வாகம் நடத்துவதில் பாரிய சிரமம்.
மன்னார் நகர சபையின் எல்லையானது பொதுவாக இருக்க வேண்டியது மன்னார் தள்ளாடி சந்தியில் இருந்து. ஆனால் எல்லை நிர்ணய சபையின் அறிக்கையின் படி பிரதேச சபை தெரிவிக்கின்றது பாலத்துக்கு அருகாமையில் இருந்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எமது எல்லையானது தள்ளாடி சந்தியில் இருந்து என்றால் தான் அது எமக்கு பொருத்தமாக இருக்கும். அந்த வகையில், நாம் எல்லோறும் ஒற்றுமையாக இருந்து இந்த விடயத்தை முன்னெடுக்க வேண்டும். நாளை குறித்த எல்லை தொடர்பான வழக்கு விசாரனை மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம். இவ்விடயத்தில் சபை உறுப்பினர்கள் யாரும் பின் நிற்காது ஒற்றுமையாக செயற்ட வேண்டும் என தெரிவித்தார்.
இதன் போது, சபை உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago