2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சம்பா நெல்லினங்களின் விலையில் வீழ்ச்சி

Gavitha   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில் சம்பா நெல்லினங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சிறுபோக நெல் அறுவடை தற்போது வேகமாக நடைபெற்று வருவதன் காரணமாக அறுவடை செய்யப்படும் நெல்லினை விற்பனை செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

75 கிலோ சம்பா மூடை 2,200 ரூபாயாகவும் சிவப்பு நெல்லினம் 2600 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் சம்பா நெல்லினங்களுக்கே கூடுதலான விலை காணப்பட்டதாகவும் தற்போது சிவப்பு நெல்லினங்களுக்கே கூடுதலான விலை காணப்படுவதாகவும் விவசாயிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளம் புனரமைப்பு நடைபெறுவதன் காரணமாக சிறுபோக நெற்செய்கை இடம்பெறவில்லை. ஏனைய குளங்களின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடை நடைபெறுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .