2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சாதனை படைத்த பல்கலை மாணவன் திடீர் தற்கொலை

Freelancer   / 2023 ஓகஸ்ட் 20 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொரட்டுவ பல்கலைக்கழக கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்த நகர் 155 ஆம் கட்டை பகுதியில் வசிக்கும் சந்திரமேனன் தேனுஜன் (வயது 21) என்ற பல்கலைக்கழக மாணவனே  நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இறந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X