Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 21 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கை அறுவடைக்கு எரிபொருளினைப் பெற்றுத் தருமாறு மாவட்டத்தின் கமக்கார அமைப்புகள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் விவசாயிகளுக்கான எரிபொருளினைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
விவசாயிகளினால் ஏக்கர் ஒன்றிற்கு 15 லீற்றர் எரிபொருளினைப் பெற்றுத் தருமாறும் 10 லீற்றர் எரிபொருள் அறுவடை இயந்திரத்திற்கும் 05 லீற்றர் எரிபொருள் நெல் மூடைகளை ஏற்றி இறக்கும் உழவு இயந்திரத்திற்கும் தேவை என மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்ட மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தின் சிறுபோக அறுவடை விரைவில் தொடங்க உள்ள நிலையில் எரிபொருளை விரைவாக பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, கல்மடு, அக்கராயன், புதுமுறிப்பு, குடமுருட்டி, வன்னேரிக்குளம், கரியாலைநாகபடுவான் ஆகிய குளங்களின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை கனகாம்பிகைக்குளம், பிரமந்தனாறு, கண்ணகைபுரம் ஆகிய கிராமங்களில் மேட்டுப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
7 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago