2025 மே 17, சனிக்கிழமை

சிறுபோகத்துக்காக முத்துஐயன்கட்டு குளம் திறக்கப்பட்டது

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

இந்த ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை மற்றும் மேட்டுநில பயிர்செய்கைக்காக, முத்துஐயன்கட்டுகுளம், இன்று (16) திறந்துவிடப்பட்டுள்ளதாக, விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முத்துஐயன்கட்டு குளத்தின் கீழான விவசாய செய்கை தொடர்பில், சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள், விவசாயிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே, இன்று இந்தக் குளம் திறந்து விடப்பட்டுள்ளது.

நடப்பாண்டில், குளத்தின் கீழ் 3,600 ஏக்கர் நெற்செய்கையும் 1,600 ஏக்கர் வரையிலான உப உணவு செய்கைக்குமாக, குளத்தின் நீர் திறந்து விடப்பட்டது.

முத்துஐயன்கட்டு குளத்தில் 23 அடி 06 அங்குலம் நீர் மட்டம் காணப்படும் நிலையில், ஜூலை 20ஆம் திகதி வரை நீர் திறந்துவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .