Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 30 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐயன்
திருத்தத்துக்குக் கொடுத்த பொலிஸாரின் வாகன சில்லைத் திருடிய நபர் ஒருவர், சங்கத்தானைப் பகுதியில் வைத்து, நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் சாவகச்சேரி பொலிஸ் நிலைய வாகனத்தின் சில்லு, காற்றுப் போனதால், அதனைத் திருத்துவதற்காக சாவகச்சேரியில் உள்ள டயர் திருத்தும் நிலையத்தில் பொலிஸார் கொடுத்துள்ளனர்.
மறுநாள் அதனைப் பெற்றுக் கொள்ளச் சென்ற வேளையில், அங்கு சில்லைக் காணாது கடை உரிமையாளர் தேடியுள்ளார்.
அத்துடன், உழவு இயந்திரத்துக்குப் பொருத்தவென கொடுக்கப்பட்டிருந்த புதிய சில்லும் காணாமல் போயிருந்தமை தொடர்பில், கடை உரிமையாளர் கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து, அருகிலுள்ள கடையொன்றில் பொருத்தப்பட்டிருந்த இரகசியக் கண்காணிப்புக் கமெராவின் பதிவுகளைக் கொண்டு, ஊழியர் ஒருவரே இவற்றைத் திருடினார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .