Freelancer / 2023 ஜூன் 10 , பி.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் 1998 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 10 ஆம்திகதி இலங்கை ராணுவத்தின் விமான தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட 33 அப்பாவி பொது மக்களுடைய 25 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று 06.10.23 உணர்வு பூர்வமாக இடம்பெற்றது
தூயக நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் முல்லை ஈசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொது சுடரினை இரண்டு மாவீரர்களின் தந்தையான முடியாண்டி ஏற்றி வைக்க தொடர்ந்து உயிரிழந்தவர்கள் நினைவாக பொது படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்கள் நினைவாக சுடர்கள் ஏற்றிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உயிரிழந்த பொதுமக்களின் உறவினர்கள் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்கள் கரைச்சி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்,முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.நோகராதலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நினைவுரைகளை ஆற்றியுள்ளார்கள். R
27 minute ago
48 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
48 minute ago
55 minute ago