2025 ஜூலை 09, புதன்கிழமை

தைத்திருநாளை முன்னிட்டு வீதியோட்ட போட்டி

George   / 2017 ஜனவரி 03 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தமிழர்களின் பாரம்பரிய உழவர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் திறன் விருத்தி கழகத்தின் ஏற்பாட்டில்  எதிர்வரும் 12 ஆம் திகதி வீதியோட்ட போட்டி நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது.

12ஆம் திகதி காலை 6 மணியளவில் இயக்கச்சி சந்தியில் இருந்து ஆரம்பமாகி ஏ-09 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசாமி கோவில் வரை முடிவடைவுள்ளது.

இவ்வீதியோட்ட போட்டி நிகழ்வில் பங்குபற்றி வெற்றியீட்டுபவர்களுக்கு பெறுதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன் வீதியோட்ட நிகழ்வில் பங்கு பற்றி இலக்கினை அடையும் அனைவருக்கும் ஆறுதல் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.

குறித்த வீதியோட்ட போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் பங்குபற்றுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

போட்டி தொடர்பான மேலதிக விவரங்களை பளைப் பிரதேச செயலாளர் பிரிவு ச.றஜிந்தன்-0766283748, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவு வ.நிதர்சன்-0770855221, கண்டாவளை பிரதே செயலாளர் பிரிவு ந. சயந்தன்-0770823921, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு கி. றாஜ்குமார்-0773581652 ஆகியோரின் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .